- முழுக்கோழி - ஒன்று
- நெய் - 6 மேசைக்கரண்டி
- பிரிஞ்சி இலை - 6
- குங்குமப்பூ பொடி - கால் தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 3
- தயிர் - 2 கப்
- இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
- பூண்டு - 8 பல்
- பச்சை மிளகாய் - 4
- கிராம்பு - 4
- பட்டை - ஒரு அங்குலத் துண்டு
- ஏலக்காய் - 3
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
- முழுக்கோழியினை அப்படியே நன்கு சுத்தம் செய்து விட்டு, ஒரு முள்கரண்டிக் கொண்டு அதன் மேல்புறம் முழுவதையும் குத்து மசாலா இறங்குவதற்கு வழி செய்யவும்.
- பிறகு தயிரினை நன்கு அடித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் கலந்து அதனை முழுக்கோழியின் மீது நன்கு தடவவும்.
- மசாலா நன்கு கறியினுள் இறங்குவதற்கு, சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
- பிறகு ஒரு வாணலியில் நெய் ஊற்றி, பிரிஞ்சி இலை மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- இப்போது மசாலா தடவி வைத்துள்ள முழுக்கோழியினை நெய்யில் போட்டு, குங்குமப்பூ பொடி, தேவையான உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வேக விடவும்.
- மசாலா நன்கு பரவி, கறியானது பொன்னிறமாக நன்கு வெந்தவுடன் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
Comments
Post a Comment