- எலும்பில்லாத சிக்கன் - அரைக் கிலோ
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 3
- பூண்டு - 6பல்
- மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
- காஷ்மீர் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி
- சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
- டொமேட்டோ சாஸ் - 3 மேசைக்கரண்டி
- சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
- சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
- அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
- மைதா மாவு - அரை மேசைக்கரண்டி
- சீனி - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- ஆயில் - தேவையான அளவு
- கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
சிக்கனை விரல் நீள அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும். அதில் சோள மாவு, அரிசி மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், அரை மேசைக்கரண்டி சோயா சாஸ், உப்பு, கேசரி பவுடர் சேர்த்து பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ள்வும். பச்சை மிளகாயை நேராக கீறிக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை பெரிசாக நறுக்கி கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு பொரிக்கவும்.சிக்கன் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பொரித்து வைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், அஜினோமோட்டோ சேர்த்து வதக்கவும்.
தீயை மிதமாக வைத்து வதங்கின வெங்காயத்துடன் அனைத்து சாஸ்களையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு தெளித்து கொள்ளவும்.அதன் பின்னர் பொரித்த சிக்கனை சேர்த்து கிளறவும். 5 நிமிடம் சிம்மிலேயே வைக்கவும்.
இறக்குவதற்கு முன் மிளகு தூள், பெரிதாக நறுக்கின வெங்காயம், சீனி சேர்த்து இறக்கவும். சுவையான ட்ராகன் சிக்கன் ரெடி.
Comments
Post a Comment