- கோழித்துண்டுகள் - ஒரு கப்
- ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
- சிக்கன் ஸ்டாக் - 4 கப்
- சோள மாவு - 2 தேக்கரண்டி
- முட்டை - ஒன்று
- சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- வினிகர் - ஒரு தேக்கரண்டி
- கோழி இறைச்சியை ஐந்து கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
- சுமார் அரை மணிநேரம் வெந்த பிறகு அந்த நீரினை(ஸ்டாக்) வடித்து 4 கப் அளவிற்கு தனியே எடுத்துக் கொள்ளவும்.
- வேக வைத்த கோழி இறைச்சியில் இருந்து எலும்புகளை நீக்கி, கறியை தனியே எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது சிக்கன் ஸ்டாக்கினை வேக வைக்கவும். அதில் எலும்பு நீக்கிய சிக்கன் துண்டங்களையும், ஸ்வீட் கார்னையும் சேர்க்கவும்.
- சிறிது வெந்தவுடன் சோள மாவினை சிறிது நீரில் கரைத்து சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கி வேகவிடவும்.
- முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு, அதையும் சிறிது சிறிதாக கொதிக்கும் சூப்பில் சேர்த்து நன்கு கலக்கவும். முட்டை கெட்டியாகாமல், மெல்லிய இழைகளாக மிதக்க வேண்டும்.
- கடைசியில் சோயா சாஸ், மிளகுத் தூள், வினிகர், உப்பு சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.
Comments
Post a Comment