வெஜ் சப்பாத்தி

  • கோதுமை மாவு - 4 கப்
  • மைதா மாவு - 2 கப்
  • துருவிய கேரட் - ஒரு கப்
  • வேகவைத்த உருளை - ஒரு கப்
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • சீனி - அரை தேக்கரண்டி
  • நெய் - தேவையான அளவு
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • காஷ்மீர் மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு கிளறி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.அதில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கவும் நெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

Comments