- பீட்ரூட் - ஒன்று
- கடலை பருப்பு - அரை கப்
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 3
- சின்ன வெங்காயம் - 15
- உப்பு - 3/4 தேக்கரண்டி
- கொத்தமல்லி - 5 கொத்து
- கறிவேப்பிலை - 2 கொத்து
- இஞ்சி - அரை அங்குலத் துண்டு
மிக்ஸியில் ஊற வைத்த பருப்பு, சோம்பு, மிளகாய் வற்றல், இஞ்சி துண்டுகள், உப்பு, சோம்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பை போட்டு அதனுடன் நறுக்கின சின்ன வெங்காயம், துருவிய பீட்ரூட், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை தயாராக எடுத்துக்கொள்ளவும்
பின் இவை அனைத்தும் ஒன்றாக சேரும்படி பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு எடுத்து உருட்டி வாழை இலை அல்லது ப்ளாஸ்டிக் கவரில் வைத்து தட்டி எண்ணெயில் போடவும்.
திருப்பி விட்டு 3 அல்லது 5 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான பீட்ரூட் வடை ரெடி.
Comments
Post a Comment