- காடை - 2
- பெரிய வெங்காயம் - ஒன்று
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
- கறி மசாலா தூள் - அரை மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் - ஒன்று
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- புதினா - 2 கொத்து
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - கால் கப்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா தூள் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் கிளறவும்.
அதன் பிறகு சுத்தம் செய்த காடை துண்டுகளை போட்டு உப்பு மற்றும் புதினா தழை போட்டு ஒரு நிமிடம் நன்கு மசாலா காடையுடன் சேரும்படி பிரட்டி விடவும்.அதில் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி ஒரு முறை நன்கு கிளறி விட்டு ஒரு தட்டை வைத்து மூடி காடையை வேக வைக்கவும்.
5 நிமிடம் கழித்து மூடியை திறந்து கிளறி விட்டு மீண்டும் மூடி விடவும். பிறகு 7 நிமிடம் கழித்து திறந்து கிளறி எண்ணெய் வெளி வந்து திக்காக ஆனதும் 2 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.சுவையான காடை பொரியல் ரெடி. இதை நெய் சாதம், பிரியாணியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலே புதினா இலையை தூவி பரிமாறவும்.
Comments
Post a Comment