- சிக்கன் - அரை கிலோ
- வெங்காயம் - 250 கிராம்
- தக்காளி - 2
- இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி + கால் தேக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி
- மல்லி தூள் - ஒரு மேசைக்கரண்டி
- கொத்தமல்லித் தழை - 3 கொத்து
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மிளகு தூள் - ஒன்றரை தேக்கரண்டி
- பட்டை - 2
- கிராம்பு - 4
- இலை - சிறிது
- உப்பு - கால் தேக்கரண்டி + 2 சிட்டிகை + அரை தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சிக்கனை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை மேசைக்கரண்டி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கும் பொழுது 2 சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பிரட்டி விடவும். அதில் தக்காளி சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும்.பிறகு மீதமுள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லிதூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி விடவும்.சிக்கனை 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். இடையில் திறந்து கிளறி விடவும். மீண்டும் 15 நிமிடம் வேக விடவும்.
சிக்கனை 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். இடையில் திறந்து கிளறி விடவும். மீண்டும் 15 நிமிடம் வேக விடவும்.எல்லாம் ஒன்றாக சேர்த்து பிரட்டி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.சுவையான சிக்கன் கிரேவி தயார்.
Comments
Post a Comment