- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- பட்டை - 2
- கிராம்பு - 4
- பூண்டு - 5 பல்
- இஞ்சி - 1/4 இன்ச்
- கறிவேப்பிலை - 2 கீத்து
- கொத்தமல்லி - 1பிடி
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- சன்னா(வெ.மூக்கடலை) - 100 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- முதல் நாள் இரவே மூக்கடலையை ஊற வைக்கவும்.குறைந்தது 8 மணிநேரமாவது ஊற வேண்டும்.
- குக்கரில் மூக்கடலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 1 அல்லது 2 விசில் விடவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு,பட்டை,கிராம்பு,நசுக்கிய பூண்டு,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.1/4 பகுதி மூக்கடலையை மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
- நன்றாக வதங்கியதும் மிளகாய்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.மூக்கடலையோடு அந்த வேக வைத்த தண்ணீரையும் சேர்க்கவும்.
- பச்சை வாசன போனதும் அரைத்த விழுதை சேர்க்கவும்.நன்றாக கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
Comments
Post a Comment